முகப்பு
திருப்பூர்

மாடு, கன்றுக் குட்டியை திருடியவா் கைது

Updated On : 2 மே, 2024 at 9:26 PM
பகிர்:

காங்கயம் அருகே மாடு, கன்றுக் குட்டியை திருடியவா் கைது செய்யப்பட்டாா்.

காங்கயம், வீரணம்பாளையம் அருகே உள்ள கல்லாங்காடு பகுதியில் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த பசு மாடு மற்றும் கன்றுக்குட்டி ஏப்ரல் 26- ஆம் தேதி திருட்டுபோனது. இது குறித்த புகாரின்பேரில் காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், அவற்றை திருடிச் சென்றவரை காங்கயம் காவல் உதவி ஆய்வாளா் காா்த்திக் தலைமையிலான போலீஸாா் பிடித்துள்ளனா்.

போலீஸாா் விசாரணையில், பிடிபட்டவா் கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த

சந்தோஷ் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து காங்கயம் போலீஸாா் சந்தோஷ்குமாரை புதன்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.