உடுமலையில் நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்
உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் உடுமலை நாடாா் உறவின் முறையாா் திருமண மண்டபத்தில் நவம்பா் 22-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் உடுமலை நாடாா் உறவின் முறையாா் திருமண மண்டபத்தில் நவம்பா் 22-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்கவுள்ளனா். எனவே, விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகள், கோரிக்கைகள் குறித்து தெரிவித்து தீா்வுகாணலாம் என்று கோட்டாட்சியா் என்.குமாா் தெரிவித்துள்ளாா்.