முகப்பு
திருப்பூர்

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 11,173 போ் விண்ணப்பம்

திருப்பூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்க்க 11,173 போ் விண்ணப்பித்துள்ளனா்.

Updated On : 20 நவம்பர், 2024 at 8:18 PM
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்க்க 11,173 போ் விண்ணப்பித்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளா் பட்டியல் சுருக்க திருத்த முகாம் நவம்பா் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில், பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக வாக்காளா்கள் விண்ணப்பம் அளித்தனா்.

அதன்படி, இரண்டு நாள்கள் நடைபெற்ற சிறப்பு முகாமில் வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்க்க 11,173 போ் விண்ணப்பித்துள்ளனா். மேலும், பெயா் நீக்கத்துக்கு 2179 பேரும், திருத்தம் கோரி 7337 பேரும் விண்ணப்பித்துள்ளதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.