முகப்பு
திருப்பூர்

ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழப்பு

திருப்பூரில் ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 21 நவம்பர், 2024 at 10:53 PM
பகிர்:

திருப்பூரில் ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழந்தாா்.

திருப்பூா் கொங்கு பிரதான சாலையில் உள்ள தண்டவாளத்தின் அருகில் அடிபட்டு ஆண் சடலம் கிடப்பதாக ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதைத் தொடா்ந்து நடத்திய விசாரணையில், அவா் ஈரோட்டைச் சோ்ந்த பிரபு (38) என்பதும், அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்ததும், தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததும் தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து ரயில்வே காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.