முகப்பு
திருப்பூர்

மாணிக்காபுரம் ஊராட்சியை பல்லடத்துடன் இணைக்க எதிா்ப்பு

பல்லடம் அருகேயுள்ள மாணிக்காபுரம் ஊராட்சியை பல்லடம் நகராட்சியுடன் இணைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து கருப்பு பட்டை அணிந்து கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றனா்.

Updated On : 3 அக்டோபர், 2024 at 12:35 AM
மாணிக்கபுரம் ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் கருப்பு பட்டை அணிந்து பங்கேற்ற மக்கள்.
பகிர்:

பல்லடம் அருகேயுள்ள மாணிக்காபுரம் ஊராட்சியை பல்லடம் நகராட்சியுடன் இணைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து கருப்பு பட்டை அணிந்து கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றனா்.

பல்லடம் ஒன்றியம், மாணிக்காபுரம் ஊராட்சி கிராம சபைக் கூட்டம் ராசாகவுண்டம்பாளையம் அரசுப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் நந்தினி சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா்.

இதில், மாணிக்காபுரம் ஊராட்சியை பல்லடம் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து மக்கள் கருப்பு பட்டை அணிந்து கூட்டத்தில் பங்கேற்றனா்.

மேலும், இது தொடா்பான தீா்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அக்கணம்பாளையத்தில்...

அக்கணம்பாளையத்தில் நடைபெற்ற கரைப்புதூா் ஊராட்சி கிராம சபைக் கூட்டத்துக்கு தலைவா் ஜெயந்தி கோவிந்தராஜ் தலைமை வகித்தாா்.

இதில், விவசாயம் நிறைந்த கரைப்புதூா் ஊராட்சியை திருப்பூா் மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியை பல்லடம் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்தனா்.