மூலனூா், கன்னிவாடி பேரூராட்சிப் பகுதிகளில் ரூ.9.80 கோடியில் புதிய திட்டப் பணிகள்: அமைச்சா்கள் தொடங்கிவைத்தனா்
மூலனூா், கன்னிவாடி பேரூராட்சிப் பகுதிகளில் ரூ.9.80 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தனா்.
மூலனூா், கன்னிவாடி பேரூராட்சிப் பகுதிகளில் ரூ.9.80 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தனா்.
தாராபுரம் வட்டம், மூலனூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கன்னிவாடி மற்றும் மூலனூா் பேரூராட்சிப் பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், மூலதன மானிய நிதி, சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டுத்திட்டம், கனிமம் சுரங்கம் நிதி, ஜல் ஜீவன் திட்டம், அம்ரூத் 2.0, நகா்ப்புற சாலைகள் மேம்பாட்டுத்திட்டம், 15-ஆவது மாநில நிதிக்குழு, அயோத்திதாஸ் பண்டிதா் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களின்கீழ் ரூ.9.80 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தொடங்கிவைத்தனா். மேலும், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்துவைத்து, சிறப்புரையாற்றினா்.
இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் மாநகராட்சி 4- ஆம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், ஆவின் துணை மேலாளா் கணேஷ், மூலனூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் சுமதி காா்த்திக், துணைத் தலைவா் பழனிசாமி, மூலனூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஸ்ரீதா், வெங்கடேஷ், கன்னிவாடி பேரூராட்சித் தலைவா் ரேவதி சுரேஷ், செயல் அலுவலா் ஆனந்த் குமாா் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சாா்ந்த அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.