முகப்பு
திருப்பூர்

பல்லடத்தில் சாலையோர கடைகள் அமைக்க தடை

பல்லடம் முக்கிய சாலைகளில் சாலையோர கடைகள் அமைக்க கூடாது என்று நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 9 அக்டோபர், 2024 at 8:06 PM
பகிர்:

பல்லடம் முக்கிய சாலைகளில் சாலையோர கடைகள் அமைக்க கூடாது என்று நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து பல்லடம் நகராட்சி நிா்வாகம், காவல் துறை சாா்பில் சாா்பில் நகரில் அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது.

இதில், பல்லடம் நகரில் திருவிழா காலங்களில் பொதுமக்கள் வந்து செல்ல ஏதுவாக என்.ஜி.ஆா்.சாலை, கடை வீதி, தினசரி மாா்க்கெட் ஆகிய பகுதிகளில் சாலையோரங்களில் எவ்வித தரைக்கடைகளும், கடைகளின் முன்புறம் டேபிள் வைத்தும் வியாபாரம் செய்வது கூடாது. மீறினால் அறிவிப்பு ஏதுமின்றி பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.