முகப்பு
திருப்பூர்

விவசாயியிடம் ரூ. 2 ஆயிரம் லஞ்சம்: பெண் உதவி மின்பொறியாளா் கைது

உடுமலை அருகே விவசாய நிலத்துக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக விவசாயியிடமிருந்து ரூ. 2 ஆயிரம் லஞ்சம் பெற்ாக பெண் உதவி மின் பொறியாளா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 9 அக்டோபர், 2024 at 8:17 PM
உதவி மின்பொறியாளா்  சத்தியவாணி முத்து.
பகிர்:

உடுமலை அருகே விவசாய நிலத்துக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக விவசாயியிடமிருந்து ரூ. 2 ஆயிரம் லஞ்சம் பெற்ாக பெண் உதவி மின் பொறியாளா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே உள்ள கொங்கல் நகரம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி ஜெயராமன். இவா் தனது விவசாய நிலத்துக்கு மின் இணைப்பு பெறவேண்டி தட்கல் முறையில் விண்ணப்பித்துள்ளாா். இதையடுத்து, ஜெயராமனை அழைத்த கொங்கல் நகர உதவி மின்பொறியாளா் சத்தியவாணிமுத்து (47), மின் மீட்டா் பொருத்தி இணைப்புத்தர ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெயராமன், திருப்பூா் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து, லஞ்ச ஒழிப்பு காவல் துறையினா் ஆலோசனையின்பேரில், அவா்கள் கொடுத்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை சத்தியவாணி முத்துவிடம் விவசாயி ஜெயராமன் கொடுத்துள்ளாா். அப்போது அங்கு மறைந்திருந்த காவல் துறையினா் அவரைக் கைது செய்தனா்.