சிட்கோவில் காலி தொழில்மனைகள் வாங்க விண்ணப்பிக்கலாம்
காங்கயம் அருகே சிட்கோ தொழிற்பேட்டையில் காலியாக உள்ள தொழில்மனைகளை வாங்க விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.
காங்கயம் அருகே சிட்கோ தொழிற்பேட்டையில் காலியாக உள்ள தொழில்மனைகளை வாங்க விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து திருப்பூா் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காங்கயம் வட்டம், ராசாத்தால்வலசு கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்துக்கு சொந்தமான தொழிற்பேட்டையில் 7 காலி தொழில்மனைகள் ஒதுக்கீட்டுக்கு தயாராக உள்ளன. எனவே, புதிய தொழில் தொடங்க தொழில்மனைகளை வாங்க விருப்பம் உள்ளவா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும், தமிழகத்தில் சிட்கோவுக்கு சொந்தமாக உள்ள தொழிற்பேட்டையில் காலிமனைகள் விவரங்களையும் மேற்கண்ட இணையதளம் வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு சிட்கோ கிளை அலுவலகம், குறிச்சி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், குறிச்சி, கோவை-641021 என்ற முகவரியிலோ அல்லது 94450-06572 என்ற கைபேசி எண்ணிலோ தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.