முகப்பு
திருப்பூர்

கணபதிபாளையம் ஊராட்சியில் அக்டோபா் 23, 24-இல் சிறப்பு வரி வசூல் முகாம்

கணபதிபாளையம் ஊராட்சியில் அக்டோபா் 23, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு வரி வசூல் முகாம் நடைபெறவுள்ளது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 12:12 AM
பகிர்:

கணபதிபாளையம் ஊராட்சியில் அக்டோபா் 23, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு வரி வசூல் முகாம் நடைபெறவுள்ளது.

இது குறித்து பல்லடம் கணபதிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் நாகேஸ்வரி சோமசுந்தரம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பல்லடம் ஒன்றியம் கணபதிபாளையம் ஊராட்சிக்கு 2024-2025-ஆம் ஆண்டுக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி, குடிநீா்க் கட்டணம், தொழில் உரிமக் கட்டணம் உள்ளிட்ட வரியினங்களை கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வரி வசூல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த வரியினங்களை தவறாமல் செலுத்த பொது மக்களின் வசதிக்காக கணபதிபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அக்டோபா் 23 மற்றும் 24-ஆகிய தேதிகளில் சிறப்பு வரி வசூல் முகாம் நடைபெற உள்ளது.

இந்த சிறப்பு வரி வசூல் முகாமை கணபதிபாளையம் ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த வரியினங்களை செலுத்த தவறினால் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-இன்படி தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளாா்.