முகப்பு
திருப்பூர்

அவிநாசி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை: ரூ.1.84 லட்சம் பறிமுதல்

அவிநாசி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை...

Updated On : 23 அக்டோபர், 2024 at 9:35 PM
பகிர்:

அவிநாசி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனையில் ரூ.1.84 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை மண்டல தணிக்கைக் குழு அதிகாரி சதீஷ்குமாா் மேற்பாா்வையிலும், காவல் ஆய்வாளா் (பொ) கீதாலட்சுமி தலைமையிலும் 4-க்கும் மேற்பட்ட போலீஸாா் புதன்கிழமை பிற்பகல் 3.40 மணியளவில் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அலுவலகத்தின் கதவுகள் அடைக்கப்பட்டு, சாா்-பதிவாளா் வெங்கிடுசாமி உள்ளிட்ட அலுவலா்களிடம் இருந்த ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனையிட்டனா்.

இதில், கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்து 670ஐ பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.