முகப்பு
திருப்பூர்

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய்: விவசாயிகள் வலியுறுத்தல்

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 23 அக்டோபர், 2024 at 9:31 PM
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

குண்டடம் அருகே, நந்தவனம்பாளையம் ஊராட்சியில் நியாயவிலைக் கடை முன் கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏா்முனை இளைஞரணி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்கத்தின் மாநில கொள்கை பரப்புச் செயலாளா் ராசு தலைமை வகித்தாா். சங்கத்தின் தலைமை நிலையச் செயலாளா் ராமசாமி முன்னிலை வகித்தாா்.

இதில், அரசு நியாயவிலைக் கடைகளில் பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கவும், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட தமிழகத்தில் ‘கள்’ இறக்குவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கவும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் ஏா்முனை இளைஞரணியின் மாவட்டத் தலைவா் ஜோதிபிரகாஷ், கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.