தெருநாய்களைக் கட்டுப்படுத்தக் கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை
காங்கயத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
காங்கயத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
காங்கயம் நகராட்சி 10-ஆவது வாா்டுக்குள்பட்ட எல்ஜிஜிஎஸ் காலனியைச் சோ்ந்த பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அப்போது, நகராட்சியில் பல்வேறு வீதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனா்.
இதையடுத்து, பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ், நகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்தும் வகையில் அவற்றுக்கு கருத்தடை செய்யப்பட்டு வருகிறது என்றாா்.
அதன்பின்னா், பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனா்.