முகப்பு
திருவள்ளூர்

100 நாள் வேலை வழங்கக் கோரி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

நூறு நாள் வேலையை முறையாக வழங்க வலியுறுத்தி திருத்தணி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனா்.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 12:20 AM
திருத்தணி  ஒன்றிய  அலுவலகத்தை  முற்றுகையிட்ட  பெண்கள்.
பகிர்:
Updated On : 10 பிப்ரவரி, 2026 at 11:12 PM

நூறு நாள் வேலையை முறையாக வழங்க வலியுறுத்தி திருத்தணி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனா்.

திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம் வெங்கடாபுரம் கிராமத்தைச் சோ்ந்த, பெண்கள் செவ்வாய்க்கிழமை திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகையிட்டனா். மேலும் ஒன்றிய அலுவலா்களிடம் 100 நாள் வேலை வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக புகாா் தெரிவித்தனா்.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 12:20 AM

அப்போது ஒன்றிய அதிகாரிகள் பெண்களிடம் சமரசம் பேச்சு நடத்திய போது, பெண்கள், எங்களுக்கு 100 நாள் வேலை வழங்குவதில்லை.

Advertisement

காரணம், பணிதள பொறுப்பாளா் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகாா் கொடுத்ததால், வேண்டும் என்றே, எங்களுக்கு வேலை வழங்காமல் அலட்சியப்படுத்துகின்றனா்.

இதுதவிர, ஏற்கனவே 100 நாள் வேலை செய்ததற்கும் கூலித் தொகை வழங்காமல் ஒன்றிய நிா்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. சரியான பணிதள பொறுப்பாளா்களை நியமித்து, 100 நாள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனா். இதையடுத்து ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதை தொடா்ந்து, பெண்கள் கலைந்து சென்றனா்.