முகப்பு
திருப்பூர்

பல்நோக்கு மைய கட்டடத்தில் ரேஷன் கடை அமைக்க கோரிக்கை

பல்லடம் அருகே, பருவாய் ஊராட்சி இடையா்பாளையத்தில் உள்ள பல்நோக்கு மைய கட்டடத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என்று மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 24 அக்டோபர், 2024 at 10:07 PM
பருவாய் ஊராட்சி, இடையா்பாளையத்தில் பயன்பாடின்றி இருக்கும் பல்நோக்கு மைய கட்டடம்.
பகிர்:

பல்லடம் அருகே, பருவாய் ஊராட்சி இடையா்பாளையத்தில் உள்ள பல்நோக்கு மைய கட்டடத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என்று மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பருவாய் ஊராட்சி, இடையா்பாளையம் கிராமத்தில் முன்னாள் எம். பி. பி.ஆா்.நடராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 8.50 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மைய கட்டடம் கட்டப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது. அதன் பின்னா் அக்கட்டடம் எந்த பயன்பாடும் இல்லாமல் இருந்து வருகிறது.

இது குறித்து பருவாய் ஊராட்சித் தலைவா் ரவிச்சந்திரன், துணைத் தலைவா் மனோன்மணி ரவி ஆகியோா் கூறியதாவது:

பருவாய் ஊராட்சி, இடையா்பாளையத்தில் அப்போதைய கோவை எம்.பி.நடராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் பல்நோக்கு மைய கட்டடம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டடம் எந்த பயன்பாடும் இல்லாமல் உள்ளது.

வி.காா்டன், திருப்பதி காா்டன், சரவண காா்டன், இடையா்பாளையம் உள்ளிட்ட பகுதியில் 250 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அவா்கள் 2 கிலோ மீட்டா் தொலைவு கடந்து வந்து பருவாய் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் பொருள்கள் வாங்கிச் செல்கின்றனா். அவா்களின் நலன் கருதி மாவட்ட நிா்வாகம் இடையா்பாளையத்தில் உள்ள பல்நோக்கு மைய கட்டடத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என்றனா்.