முகப்பு
திருப்பூர்

தாராபுரம் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள்

தீபாவளி பண்டிகையையொட்டி, தாராபுரம் நகராட்சியில் பணியாற்றும் 200 தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 30 அக்டோபர், 2024 at 9:29 PM
தூய்மைப் பணியாளருக்கு புத்தாடை வழங்கும் நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன்.
பகிர்:

தீபாவளி பண்டிகையையொட்டி, தாராபுரம் நகராட்சியில் பணியாற்றும் 200 தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன் தலைமை வகித்து, நகராட்சியில் பணிபுரியும் நிரந்தர மற்றும் தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் 200 பேருக்கு தனது சொந்த செலவில் புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்துத் தெரிவித்தாா்.

இதில், தாராபுரம் நகராட்சி மேலாளா் முருகராஜ், சுகாதார அலுவலா் மணிகண்டன், நகா்மன்ற உறுப்பினா்கள் சீனிவாசன், முகமது யூசுப், செலின் பிலோமினா, மலா்வழி கணேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.