கால்நடைகளுக்கு இலவச மருத்துவ முகாம்
வெள்ளக்கோவில், பூசாரிவலசு கிராமத்தில் கால்நடைகளுக்கான இலவச மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வெள்ளக்கோவில், பூசாரிவலசு கிராமத்தில் கால்நடைகளுக்கான இலவச மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கால்நடை பராமரிப்புத் துறை, தனியாா் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற முகாமிற்கு ஓலப்பாளையம் அரசு கால்நடை மருத்துவா் தட்சிணாமூா்த்தி பங்கேற்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தாா்.
இதில், கால்நடைகளுக்கு சினை ஊசி, தடுப்பூசி, குடற்புழு நீக்க மருந்துகள், ஈ தடுப்பு, மடிநோய் தடுப்பு மருந்துகள் 55 மாடுகளுக்கும், 480 ஆடுகளுக்கும் வழங்கப்பட்டன.