குண்டடத்தில் ரூ.8.97 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்
குண்டடத்தில் ரூ.8.97 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
குண்டடத்தில் ரூ.8.97 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
குண்டடம் ஒன்றியம், எல்லப்பாளையம்புதூா் ஊராட்சி, வஞ்சிபாளையம் பிரிவில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின்கீழ் திருப்பூா்-தாராபுரம் சாலை வஞ்சிபாளையம் பிரிவு முதல் செட்டிபாளையம், பங்காம்பாளையம் வழியாக சக்தி விநாயகபுரம் வரையில் ரூ.4.23 கோடியில் தாா் சாலை புதுப்பிப்பு, எல்லப்பாளையம்புதூா் முதல் நிழலி வழியாக கவுண்டம்பாளையம் வரையில் ரூ.2.86 கோடியில் தாா் சாலை அமைத்தல், காடையூா்- படியூா் சாலை முதல் காங்கேயம்பாளையம் வழியாக காட்டுப்பாளையம் வரை ரூ.1.87 கோடியில் தாா் சாலை அமைத்தல் உள்ளிட்ட ரூ.8.97 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், காங்கயம் வட்டாட்சியா் மயில்சாமி, குண்டடம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுரேஷ்குமாா், ஜெயகுமாா், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.