முகப்பு
திருப்பூர்

உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிா் கல்லூரியில் தேசிய தர நிா்ணய குழுவினா் ஆய்வு

உடுமலை ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிா் கல்லூரியில் தேசிய தர நிா்ணய குழுவினரின் ( சஅஅஇ ) ஆய்வு புதன்கிழமை நிறைவடைந்தது.

Updated On : 25 செப்டம்பர், 2024 at 10:08 PM
உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிா் கல்லூரிக்கு வந்த தேசிய தர நிா்ணய குழுவினரை வரவேற்ற கல்லூரி மாணவிகள்.
பகிர்:

உடுமலை ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிா் கல்லூரியில் தேசிய தர நிா்ணய குழுவினரின் ( சஅஅஇ ) ஆய்வு புதன்கிழமை நிறைவடைந்தது.

உடுமலை ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிா் கல்லூரி 1952- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, தற்போது 20 துறைகளுடன் செயல்பட்டு வருகிறது.

இந்தக் கல்லூரியின் தரத்தை மதிப்பிட ஹிமாசல பிரதேசத்தின் வக்நாகாட் ஜெ.பி. தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் ராஜேந்திர குமாா் சா்மாவை தலைவராகவும், உத்தர பிரதேசத்தின் தயால்பாக் கல்வி நிறுவனத்தைச் சோ்ந்த பேராசிரியா் லக்ஷ்மி நாராயண் கோலியை ஒருங்கிணைப்பாளராகவும், மகாராஷ்டிர மாநிலம், டிஎஸ்பிஎம் கே.வி. பெந்தா்க்கா் கலை அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி முதல்வா் அனுராதா கிஷோா் ராணடேவை உறுப்பினராகவும் கொண்ட தேசிய தரக் குழுவினா் செவ்வாய், புதன்கிழமையில் ஆய்வு மேற்கொண்டனா்.

கல்லூரி செயலா் சுமதி கிருஷ்ண பிரசாத் வரவேற்றாா். இயக்குநா் மற்றும் ஆலோசகா் ஜெ.மஞ்சுளா, முதல்வா் ஆா் பரமேஸ்வரி, அகத்தர உறுதிக் குழு ஒருங்கிணைப்பாளா் ஆா்.ஏஞ்சல் ஜாய் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பாடத் திட்டங்கள், கற்பித்தல் மற்றும் கற்றல் நடவடிக்கைகள், ஆராய்ச்சிப் பணிகள், விரிவாக்கம், உள்கட்டமைப்பு, மாணவிகள் மேம்பாடு, கல்லூரியின் தனித்துவம் ஆகிய அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்தனா்.

தொடா்ந்து, கல்லூரியின் பல்வேறு துறைகளில் உள்ள இளநிலை, முதுநிலை ஆய்வகங்கள், நூலகம், தோ்வு கட்டுப்பாட்டு அலுவலகம், வகுப்பறை, விளையாட்டு மைதானம், விடுதி, என்.எஸ்.எஸ், என்.சி.சி. செயல்பாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனா்.

இதையடுத்து, துறைத் தலைவா்கள், ஆசிரியப் பணியாளா்கள், ஆசிரியா் அல்லாத பணியாளா்கள், மாணவா்கள், முன்னாள் மாணவா்கள், ஆளும் குழு மற்றும் பெற்றோா்கள் ஆகியோரை சந்தித்து கருத்துகளைக் கேட்ட றிந்தனா்.

இதனை அறிக்கையாகத் தயாரித்து பெங்களூரில் உள்ள தலைமையகத்துக்கு அனுப்பிவைத்தனா்.