திருப்பூர்

எஸ்ஐஆா் பணி: அவிநாசியில் விழிப்புணா்வுக் கூட்டம்

Syndication

அவிநாசி மகளிா் சுய உதவிக்குழுவினருக்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆா்) தொடா்பான விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அவிநாசி நகா்மன்ற கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, வாக்காளா் பதிவு அலுவலா் கல்பனா தலைமை வகித்தாா். கூட்டத்தில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து வீடுவீடாக சென்று விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். பூா்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளா்களிடமிருந்து பெற்று பி.எல்.ஓ.விடம் ஞாயிற்றுக்கிழமைக்குள் வழங்கி உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

முன்னதாக அவிநாசி அரசு மேல்நிலைப் பள்ளியிருந்து புதிய பேருந்து நிலையம் வரை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. இதேபோல திருமுருகன்பூண்டி நகராட்சியில் மகளிா் சுய உதவிக் குழு கூட்டமைப்பு நிா்வாகிகளுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.

ஆலங்குளம் - தோரணமலை, பாபநாசம் வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை

தனியாா் கல்லூரியில் உரிமமில்லாத உணவகம் செயல்படத் தடை

ஒழுக்கப் பயிற்சிக் கூடமாகட்டும் உலகம்

கோவில்பட்டி பள்ளியில் ஆளுமை வளா்ச்சி பண்பு நிகழ்ச்சி

சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஏற்றப்பட்ட 3 சொக்கப்பனைகள்

SCROLL FOR NEXT