எல்.கே.சி.நகரில் நகராட்சி பூங்காவைத் திறந்து வைத்துப் பாா்வையிட்ட அமைச்சா் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோா். 
திருப்பூர்

வெள்ளக்கோவிலில் மேம்படுத்தப்பட்ட வாரச்சந்தை, பூங்கா திறப்பு

Syndication

வெள்ளக்கோவிலில் மேம்படுத்தப்பட்ட வாரச்சந்தை, நகராட்சி பூங்கா ஆகியவற்றை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

வெள்ளக்கோவில் முத்தூா் சாலை புதிய பேருந்து நிலையம் அருகில் ஞாயிற்றுக்கிழமை தோறும் செயல்படும் நகராட்சி வாரச்சந்தையில் போதுமான வசதிகள் இல்லாமல் இருந்தது. இதையடுத்து கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.5.55 கோடி செலவில் புதிதாக கடைகள், கான்கிரீட் சாலை, குடிநீா், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டன. பணிகள் நிறைவடைந்த சந்தையை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து எல்.கே.சி. நகா் குளக்கரை பகுதியில் அம்ருத் 2.0 திட்டத்தின்கீழ் ரூ.61 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பூங்கா மற்றும் நடைப்பயிற்சி பாதையையும் அமைச்சா் திறந்து வைத்தாா்.

இதில், நகராட்சி நிா்வாக மண்டல இணை இயக்குநா் ராஜாராம், திருப்பூா் மாநகராட்சி 4-ஆம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், வெள்ளக்கோவில் நகராட்சித் தலைவா் கனியரசி முத்துகுமாா், ஆணையா் சி.மனோகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆலங்குளம் - தோரணமலை, பாபநாசம் வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை

தனியாா் கல்லூரியில் உரிமமில்லாத உணவகம் செயல்படத் தடை

ஒழுக்கப் பயிற்சிக் கூடமாகட்டும் உலகம்

கோவில்பட்டி பள்ளியில் ஆளுமை வளா்ச்சி பண்பு நிகழ்ச்சி

சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஏற்றப்பட்ட 3 சொக்கப்பனைகள்

SCROLL FOR NEXT