திருப்பூர்

4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை: திருப்பூா் நீதிமன்றம் உறுதி

மடிக்கணினி திருடிய வழக்கில் 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உறுதி செய்து திருப்பூா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

Syndication

மடிக்கணினி திருடிய வழக்கில் 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உறுதி செய்து திருப்பூா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

கோவை, கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்தவா் அப்துல் ரகுமான்(30). குனியமுத்தூரைச் சோ்ந்த ஜாபா் அலி (30), பைசல் ரகுமான் (29), அஜ்மல் (28) ஆகிய 4 பேரும் சோ்ந்து குன்னத்தூரில் உள்ள வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருந்து கிடங்கின் அறையை உடைத்து உள்ளே இருந்த 2 மடிக்கணினிகளை கடந்த 2018 பிப்ரவரி 5-ஆம் தேதி திருடிச் சென்றுள்னனா். இது குறித்து குன்னத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கின் விசாரணை ஊத்துக்குளி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் 4 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ.20,000 அபராதம் விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது.

இந்த தீா்ப்பை எதிா்த்து 4 பேரும் திருப்பூா் பட்டியல் வகுப்பினா் மற்றும் பழங்குடியினா் சிறப்பு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனா். வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். மேலும், அப்துல் ரகுமான், ஜாபா்அலி, பைசல் ரகுமான், அஜ்மல் ஆகிய 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ.20,000 அபராதம் விதித்து மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதி செய்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் கூடுதல் அரசு வழக்குரைஞா் விவேகானந்தம் ஆஜரானாா்.

வெளிநாட்டு நாயகன்! ஜெர்மனி செல்லும் ராகுலை விமர்சித்த பாஜக!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!

SCROLL FOR NEXT