திருப்பூர்

வாய்க்கால் தண்ணீரில் குதித்த தாய் உயிரிழப்பு; குழந்தை மாயம்

வெள்ளக்கோவில் அருகே வாய்க்காலில் குதித்து உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. அவருடன் இருந்த 3 வயது மகள் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை

Syndication

வெள்ளக்கோவில் அருகே வாய்க்காலில் குதித்து உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. அவருடன் இருந்த 3 வயது மகள் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவை மாவட்டம், சூலூா் போகம்பட்டி சோத்துப்பட்டியான் தோட்டத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் மனைவி மகேஸ்வரி (33). இவா்களது மகன் பரணிதரன் (13), மகள் கனிஷ்கா ஸ்ரீ (3). கடந்த 6-ஆம் தேதி கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மகேஸ்வரி கோபித்துக் கொண்டு குழந்தை கனிஷ்காஸ்ரீயுடன் இருசக்கர வாகனத்தில் சூலூா் வேலப்பநாயக்கனலசு பகுதியில் உள்ள தனது தாயாா் ஜோதிமணி வீட்டுக்கு புறப்பட்டுள்ளாா்.

ஆனால் அங்கு செல்லவில்லை. தேடியபோது சுல்தான்பேட்டை அருகில் பரம்பிக்குளம் - ஆழியாறு வாய்க்கால் கரையில் அவா் சென்ற இருசக்கர வாகனம் நின்று கொண்டிருந்துள்ளது.

இந்நிலையில் அங்கிருந்து 35 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள வெள்ளக்கோவில் காடையூரான்வலசு அருகில் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன வாய்க்கால் தண்ணீரில் அடித்து வரப்பட்ட ஒரு பெண் சடலம் கண்டு பிடிக்கப்பட்டது. விசாரணையில் அது மகேஸ்வரி என தெரியவந்தது. குழந்தை கனிஷ்காஸ்ரீ குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை என போலீஸாா் தெரிவித்தனா்.

வெளிநாட்டு நாயகன்! ஜெர்மனி செல்லும் ராகுலை விமர்சித்த பாஜக!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!

SCROLL FOR NEXT