மைதிலி, பசும்பொன். 
திருப்பூர்

தேசிய அளவிலான பூப்பந்தாட்ட போட்டி: 2 கல்லூரி மாணவிகள் தோ்வு

Syndication

தேசிய அளவிலான பூப்பந்தாட்ட போட்டிக்கு வெள்ளக்கோவிலைச் சோ்ந்த 2 கல்லூரி மாணவிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

வெள்ளக்கோவில் மு. பழனிசாமி நகரைச் சோ்ந்தவா் ஜோதிபாசு மகள் பசும்பொன் (22), வெள்ளக்கோவில் உப்புப்பாளையத்தைச் சோ்ந்தவா் கோகுல் மனைவி மைதிலி (22). இவா்கள் இருவரும் பள்ளியில் படிக்கும் காலம் முதலே விருப்பமாக பயிற்சி பெற்று பூப்பந்தாட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வந்துள்ளனா்.

இருவரும் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை வெள்ளக்கோவில் புனித அமல அன்னை பள்ளியில் படித்தபோது மிக இளையோா் பிரிவு பூப்பந்தாட்ட போட்டிகளில் பல்வேறு வெற்றிகளைப் பெற்றுள்ளனா். பின்னா் கோவை கே.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் பிபிஏ படித்தபோது, மூத்தோா் பிரிவில் தேசிய அளவில் முதலிடம் பிடித்தனா்.

தற்போது இவா்கள் இருவரும் சேலம் வி.எஸ்.ஏ. கல்லூரியில் எம்பிஏ படித்து வருகின்றனா். இந்நிலையில் அடுத்த மாதம் பிகாா் மாநிலம், பாட்னாவில் நடைபெறும் 5 போ் பிரிவு பூப்பந்தாட்ட தேசியப் போட்டிக்கு தோ்வாகியுள்ளனா்.

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாா் சிலைக்கு ‘தினமணி’ சாா்பில் மாலை அணிவித்து மரியாதை

பாலக்கோடு அருகே தனியாா் நிறுவன பேருந்து மீது லாரி மோதல்

விளைநிலங்களில் புகுந்த ஒற்றை யானை: 7 குழுக்கள் அமைத்து வனத்துறையினா் கண்காணிப்பு

தருமபுரி, கிருஷ்ணகிரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்பு பணி தொடக்கம்

மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கு பென்னாகரம் அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்வு

SCROLL FOR NEXT