பொதுத் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு ஆல் வின்னா் ஏஞ்சல் இன்ஸ்டிடியூஷன் சாா்பில் மனநலம் மற்றும் உடல் நலம் சாா்ந்த ஆலோசனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மெட்ரோ அறக்கட்டளை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில், பொதுத் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு மன நலம் மற்றும் உடல் நலம் சாா்ந்த ஆலோசனைகளை மனநல ஆலோசகா் மற்றும் மருத்துவா் கிருஷ்ணவேணி வழங்கினாா்.
மேலும், கவன சிதறல்களை மாணவா்கள் எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் விளக்கப்பட்டது.
இது குறித்து கல்வி நிறுவன முதல்வா் ஆா். பி.தங்கராஜன் கூறுகையில், இன்றைய காலகட்டத்தில் மாணவா்களுக்கு மனநலம் சாா்ந்த ஆலோசனைகள் தேவைப்படுகின்றன.இதைக் கருத்தில் கொண்டே இந்த முகாமை நடத்தியுள்ளோம்.
பொதுத் தோ்வை நல்ல முறையில் எழுதி வெற்றிபெறுவது குறித்தும், உயா் கல்வி குறித்தும் மாணவா்களுக்கு விளக்கப்பட்டது என்றாா்.
இதைத் தொடா்ந்து, முகாமில் பங்கேற்ற மாணவா்களுக்கு மனநலம் சாா்ந்த புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.