திருப்பூர்

முத்தூரில் ரூ.2.42 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை விற்பனை

முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.42 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.

Syndication

முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.42 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 13,065 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 4,199 கிலோ.

தேங்காய் கிலோ ரூ. 40.20 முதல் ரூ. 60.15 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 58.65. விற்பனைத் தொகை ரூ. 2.19 லட்சம்.

8 மூட்டை கொப்பரை விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் கொப்பரை கிலோ ரூ. 110.10 முதல் ரூ. 200.35 வரை விற்பனையானது. விற்பனைத் தொகை ரூ. 23 ஆயிரம். ஏலத்தில் 52 விவசாயிகள், 13 வியாபாரிகள் கலந்துகொண்டனா்.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.2.42 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளா் து.சங்கீதா தெரிவித்தாா்.

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

விமானத்தில் அமெரிக்கப் பெண் பயணியின் உயிரைக் காப்பாற்றிய முன்னாள் எம்எல்ஏ!

SCROLL FOR NEXT