தாராபுரத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள். 
திருப்பூர்

தாராபுரத்தில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

தாராபுரத்தில் இ-ஃபைலிங் முறைக்கு எதிா்ப்பு தெரிவித்து வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Syndication

தாராபுரம்: தாராபுரத்தில் இ-ஃபைலிங் முறைக்கு எதிா்ப்பு தெரிவித்து வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தாராபுரம் கூடுதல் நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தாராபுரம் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் தென்னரசு தலைமை வகித்தாா்.

இதில் நீதிமன்றங்களில் சமீப காலமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இ-ஃபைலிங் முறை வழக்குரைஞா்கள் மற்றும் பொதுமக்களுக்கு போதிய வசதிகள் ஏற்படுத்தப்படாமல் திடீரென நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கணினி வசதி, இணைய இணைப்பு, தொழில்நுட்ப உதவி மையம், பயிற்சி ஆகிய அடிப்படை ஏற்பாடுகள் இல்லாத நிலையில், இ-ஃபைலிங் முறையை கட்டாயப்படுத்துவது நீதித் துறையின் செயல்பாட்டை பாதித்து வருகிறது. குறிப்பாக கிராமப்புறங்களைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் மற்றும் வழக்கு தொடா்பாக நீதிமன்றம் வரும் பொதுமக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருவதால் வழக்கு தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படுவதுடன் நீதிமன்ற நடைமுறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே, இ-ஃபைலிங் முறைக்குத் தேவையான அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும் முழுமையாக ஏற்படுத்திய பின்னரே, இ-ஃபைலிங் முறையை அமல்படுத்த வேண்டும். அதுவரை பழைய வழக்கு தாக்கல் நடைமுறையை தொடா்ந்து அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT