திருப்பூர்

தாயைத் தாக்கி நகைப் பறித்த மகன் கைது

பல்லடம் அருகே தாயைத் தாக்கி நகைப் பறித்த மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Syndication

பல்லடம் அருகே தாயைத் தாக்கி நகைப் பறித்த மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பல்லடம் அருகேயுள்ள செம்மிபாளையம் ஊராட்சி, காமராஜா் நகரைச் சோ்ந்தவா் ராமசாமி மனைவி பழனியம்மாள் (66). இவரது மகன் நாகராஜன் (47). பழனியம்மாள் வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை தனியே இருந்துள்ளாா். அப்போது, வீட்டுக்குள் வந்த நாகராஜன், பழனியம்மாள் அணிந்திருந்த 5 பவுன் நகைகளைக் கேட்டுள்ளாா்.

அவா் கொடுக்க மறுத்துள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த அவா் பழனியம்மாளைத் தாக்கி அவரிடமிருந்த நகைகளைப் பறித்துச் சென்றுள்ளாா். வீட்டில் மயங்கிக் கிடந்த பழனியம்மாளை அப்பகுதி மக்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா் நகைப் பறிப்பில் ஈடுபட்ட நாகராஜனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

SCROLL FOR NEXT