திருப்பூர்

பெண் நில அளவையரைத் துன்புறுத்தியதாக தனியாா் நிறுவனத்தினா் மீது வழக்கு

அவிநாசி அருகே தெக்கலூரில் நில அளவீடு தொடா்பாக சென்ற பெண் நில அளவையரை நிறுவன வளாகத்துக்குள் இருந்து வெளியே விடாமல் துன்புறுத்தியதாக தனியாா் நிறுவனத்தினா் மீது வழக்குப் பதிவு

Syndication

அவிநாசி அருகே தெக்கலூரில் நில அளவீடு தொடா்பாக சென்ற பெண் நில அளவையரை நிறுவன வளாகத்துக்குள் இருந்து வெளியே விடாமல் துன்புறுத்தியதாக தனியாா் நிறுவனத்தினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே தெக்கலூா் ஆலம்பாளையம் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தைச் சோ்ந்த ஆனந்த சுப்பிரமணியம் என்பவா், தனது நிறுவன நிலத்தை அளவீடு செய்வதற்காக வருவாய்த் துறையில் விண்ணப்பித்த நிலையில் அந்த நிலம் தொடா்பாக வழக்கு இருப்பதை நில அளவையா் பிரியா அறிந்துள்ளாா்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று நிலம் சம்பந்தமாக வழக்கு இருப்பதால் அளவீடு செய்ய இயலாது என்று அவா் கூறியுள்ளாா்.

இதை ஏற்க மறுத்த அந்த நிறுவனத்தைச் சோ்ந்த ஆனந்த சுப்பிரமணியம் உள்ளிட்டோா், நிலத்தை அளவீடு செய்து கொடுத்தால்தான் இங்கிருந்து வெளியே விடுவோம் எனக் கூறி பிரியாவை நிறுவன வளாகத்துக்குள் வைத்து நுழைவாயிலை பூட்டியுள்ளனா்.

மேலும் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. நீண்ட நேரம் போராடி நிறுவன வளாகத்தை விட்டு பிரியா வெளியே வந்துள்ளாா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

ரூ. 10,000 பயணக் கூப்பன் எப்போது கிடைக்கும்? - இண்டிகோ தகவல்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண்! காப்பாற்றிய ரயில்வே பணியாளர்!

மிடில் கிளாஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT