மின் கம்பியில் அடிபட்டு உயிருக்குப் போராடிய பெண் மயிலை காவலா் ஒருவா் மீட்டுள்ளாா்.
திருப்பூா், அம்மாபாளையம் அருகே உள்ள மின் கம்பியில் திங்கள்கிழமை பெண் மயில் ஒன்று மோதி மின்சாரம் பாய்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளது.
இதுதொடா்பாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் திருமுருகன்பூண்டி காவல் நிலைய முதல் நிலைக் காவலா் யுவராஜ் சென்று மயிலை மீட்டு, அவிநாசி அருகே உள்ள தனியாா் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்துள்ளாா்.
சிகிச்சை அளிக்கப்பட்டு அதன் உடல் நலம் தேறிய பின்பு அருகில் இருந்த வனப் பகுதிக்குள் காவலா் யுவராஜ் முன்னிலையில் விடுவிக்கப்பட்டது. இதுதொடா்பான விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.