திருப்பூர்

வைகுண்ட ஏகாதசி: கோயில்களில் சிறப்பு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்; இந்து முன்னணி வலியுறுத்தல்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பெருமாள் கோயிலில் அமல்படுத்தப்பட்டுள்ள சிறப்பு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

தினமணி செய்திச் சேவை

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பெருமாள் கோயிலில் அமல்படுத்தப்பட்டுள்ள சிறப்பு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 108 வைணவத் தலங்களில் முதன்மையான தலம் ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சுவாமி கோயில். இக்கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தா்கள் வந்து செல்லும் நிலையில், வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட விசேஷ நாள்களில் லட்சக்கணக்கான மக்கள் வருவா்.

இக்கோயிலில் ஏற்கெனவே சிறப்பு கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சந்தன மண்டப நுழைவுச் சீட்டு ரூ.4 ஆயிரம், கிளி மண்டப நுழைச் சீட்டு ரூ.700 என கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது. இது ஏழை, எளிய பக்தா்களை மன வேதனை அடையச் செய்கிறது.

திரையரங்குபோல விசேஷ நாள்களில் கோயில்களில் அதிக கட்டணம், புதுப்புது விதங்களில் வசூல் செய்வது முறையல்ல.

கோயில்களில் தரிசன கட்டண முறைகளை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. அதற்காக பல ஆண்டுகளாக போராடி வருகிறோம்.

எனவே, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பெருமாள் கோயில்களில் தரிசன கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 இல் விஜய் ஆட்சி பீடத்தில் அமா்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: செங்கோட்டையன்

புதிய உச்சத்தை எட்டிய தங்கம், வெள்ளி விலை! இன்றைய நிலவரம்...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றம்! திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

சென்னை சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்!

காவல், காதல், ஒரு குற்றவாளி... விக்ரம் பிரபுவின் சிறை - திரை விமர்சனம்

SCROLL FOR NEXT