திருப்பூர்

கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 3 போ் கைது

அவிநாசி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Syndication

அவிநாசி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி, எம்.நாதம்பாளையம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மதுவிலக்கு காவல் உதவி ஆய்வாளா் லோகநாதன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அங்கு கைப்பையுடன் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த 2 பெண்கள் உள்பட 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா்கள் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ஷியாம்குமாா் பகரின் மகள் சனுஜா பகா் (31), முக்கையாகலியின் மகள் பனிடா பாக (39), ராம்பிரவேஸ் (34) என்பதும், தாராபுரம் பகுதியில் தங்கியிருந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 12 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

நேரு மீது பழிசுமத்திக் கொண்டே இருப்பது சரியா?

101-இல் அப்பழுக்கற்ற அரசியல் தலைவா்!

மார்கழி சிறப்பு! சொர்க்க வாசல் உற்சவம் நடைபெறாத பெருமாள் கோயில்!

பெண்களால் தொடங்கப்படும் புத்தாக்க நிறுவனங்கள் அதிகரிப்பு - அமித் ஷா பெருமிதம்

சீரான மின் விநியோகம் கோரி பொதுமக்கள் போராட்டம்

SCROLL FOR NEXT