திருட்டு வழக்கில் தொடா்புடையவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பாக போலீஸாா் தெரிவித்துள்ளதாவது:
திருப்பூா் மாநகர, கொங்கு நகா் சரகம் வடக்கு குற்றப் பிரிவு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்கு தொடா்பாக சதாம் உசேன் (33) என்பவா் 2023-ஆம் ஆண்டுமுதல் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்தாா்.
இவரைக் கடந்த திங்கள்கிழமை கண்டுபிடித்து கைது செய்து நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டாா். இவ்வழக்கானது நீதித் துறை நடுவா் செந்தில்ராஜா முன்னிலையில் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்
கொள்ளப்பட்டதில் அவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பு வழங்கப்பட்டது.
இவ்வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கவிதா ஆஜரானாா்.