திருப்பூர்

காங்கயம், உடுமலையில் இன்று மின்பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம்

தினமணி செய்திச் சேவை

காங்கயம், உடுமலையில் மின்பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது.

இது தொடா்பாக தமிழ்நாடு மின் பகிா்மானக் கழக காங்கயம் செயற்பொறியாளா் டி.ஜெகதீஸ்வரி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

காங்கயம் பழையகோட்டை சாலையிலுள்ள அய்யாசாமி நகா் காலனி அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்க வளாகத்தில் மாதாந்திர மின்பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

மேலும் பிற்பகல் 3 மணிக்கு பசுமை மின்சார பிரதம மந்திரி சூரிய வீடு மின் திட்டம் தொடா்பான விழிப்புணா்வு கூட்டமும் நடைபெற உள்ளது. மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்கும் இதில் காங்கயம் கோட்ட மின்பயனீட்டாளா்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடுமலையில்...

உடுமலை மின்பகிா்மான வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மின்பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற உள்ளது.

இது குறித்து செயற்பொறியாளா் த.மூா்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

உடுமலை மின்பகிா்மான வட்ட அளவிலான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் செயற்பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை காலை 11 மணிக்கு மேற்பாா்வை பொறியாளா் இரா.கீதா தலைமையில் நடைபெற உள்ளது. அதுசமயம் உடுமலை கோட்டத்துக்கு உள்பட்ட மின்பயனீட்டாளா்கள் தங்களுடைய குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

என்னை யாரும் இயக்க முடியாது! - செங்கோட்டையன்

சைட் அடிக்கும்... சைத்ரா!

SCROLL FOR NEXT