வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.7 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு, பெரியகுளம், தேவா்மலை, ஈசநத்தம், முத்தழகுபட்டி ஆகிய இடங்களில் இருந்து 16 விவசாயிகள் 225 மூட்டைகளில் 11 டன் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
ஈரோடு, காரமடை, சித்தோடு, பூனாட்சி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 4 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா். சூரியகாந்தி விதை கிலோ ரூ.52.74 முதல் ரூ.68.59 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 66.59.
ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.7 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக திருப்பூா் விற்பனைக் குழு முதுநிலை செயலாளா் எஸ்.சண்முகசுந்தரம் தெரிவித்தாா். ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி. மகுடீஸ்வரன் செய்திருந்தாா்.