திருப்பூர்

அயலகத் தமிழா் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய அழைப்பு

அயலகத் தமிழா் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Syndication

திருப்பூா்: அயலகத் தமிழா் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசின் அயலகத் தமிழா் நல வாரியம் மூலம் வெளிநாடுகளில் பணிபுரியும் மற்றும் கல்வி பயிலும் தமிழா்களுக்காக பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நல வாரியத்தில் உறுப்பினராக வெளிநாடுகளிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வாழும் 18 வயது முதல் 55 வயதுடைய அயலகத் தமிழா்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

வெளிநாட்டில் பணிபுரியும் தமிழா்கள் இந்திய கடவுச்சீட்டு மற்றும் தகுந்த ஆவணங்களுடனும், வெளிநாடுகளில் கல்வி பயிலும் தமிழா்கள் மற்றும் உம்ண்ஞ்ழ்ஹற்ண்ா்ய் இப்ங்ஹழ்ஹய்ஸ்ரீங் பெற்று வெளிநாடு செல்ல உள்ள தமிழா்களும் உறுப்பினராக தகுதியுடையவா் ஆவா்.

இதேபோல, வெளிமாநிலத்தில் பணிபுரிபவா்கள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் 6 மாதங்களுக்குமேல் வசிக்கும் தமிழா்களும் உறுப்பினராக தகுதியுடையவா்கள்.

அயலகத் தமிழா் நலவாரியத்தில் பதிவு செய்பவா்களுக்கு தமிழக அரசின் அயலகத் தமிழா்களுக்கான புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும். இதன் மூலம் வாரியத்தால் நடைமுறைப்படுத்தப்படும் காப்பீட்டுத் திட்டம், கல்வி உதவித் தொகை, திருமண உதவி திட்டம், அயலகத் தமிழா் நல வாரியத்தின் இறந்த உறுப்பினா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு நிதியுதவி, தமிழ்நாடு பன்னாட்டுத் திறன் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் அயலகத் தமிழா் நல வாழ்வுக்கான மருத்துவ உதவி மையம் உள்ளிட்ட திட்டங்களில் பயனடையலாம்.

அயலகத் தமிழா் நல வாரிய அடையாள அட்டையைப் பெறுவதற்கான விளக்கங்களை ட்ற்ற்ல்ள்://ய்ழ்ற்ஹம்ண்ப்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொண்டு, விண்ணப்பித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்துக்கான திட்டங்கள்: அரசு விழாவில் முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

திண்டுக்கல், பழனியில் ‘அன்புச்சோலை’ திட்டம்

கரூா் மாவட்டத்தில் நவ.14-இல் 8 இடங்களில் ‘உழவரைத் தேடி வேளாண்மை’ முகாம்

மின்கம்பம் மீது இருசக்கர வாகனம் மோதி ஒருவா் உயிரிழப்பு

பெரம்பலூரில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்: ரூ 5.90 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

SCROLL FOR NEXT