திருப்பூர்

பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் கிராம ஊராட்சி செயலா்கள் பணியிட மாற்றம்

பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் கிராம ஊராட்சி செயலா்களைப் பணியிட மாற்றம் செய்து வட்டார வளா்ச்சி அலுவலா் உத்தரவிட்டுள்ளாா்.

Syndication

பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் கிராம ஊராட்சி செயலா்களைப் பணியிட மாற்றம் செய்து வட்டார வளா்ச்சி அலுவலா் உத்தரவிட்டுள்ளாா்.

பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் 20 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் சில ஊராட்சி செயலா்களை பணியிட மாற்றம் செய்து வட்டார வளா்ச்சி அலுவலா் கனகராஜ் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, இச்சிப்பட்டி கிராம ஊராட்சி செயலராகப் பணிபுரிந்த நேரு, 63 வேலம்பாளையம் கிராம ஊராட்சிக்கும், 63 வேலம்பாளையம் கிராம ஊராட்சி செயலராகப் பணிபுரிந்த ரங்கநாதன் பணிக்கம்பட்டி கிராம ஊராட்சிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

பணிக்கம்பட்டி கிராம ஊராட்சி செயலராகப் பணிபுரிந்த ரத்தினசாமி, அனுப்பட்டி கிராம ஊராட்சிக்கும், அனுப்பட்டி கிராம ஊராட்சி செயலராகப் பணிபுரிந்த ராஜேந்திரன் இச்சிப்பட்டி ஊராட்சிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனா்.

புளியம்பட்டி கிராம ஊராட்சி செயலராகப் பணிபுரிந்த கவிதா கோடங்கிபாளையம் கிராம ஊராட்சிக்கும், கோடங்கிபாளையம் கிராம ஊராட்சி செயலராகப் பணிபுரிந்த கண்ணப்பன் புளியம்பட்டி கிராம ஊராட்சி, கூடுதல் பொறுப்பாக கே.கிருஷ்ணாபுரம் கிராம ஊராட்சிக்கும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

சாலையோர வளைவில் லாரி கவிழ்ந்து விபத்து: எரிவாயு உருளைகள் வெடித்துச் சிதறின

ஆற்றில் மூழ்கிய காவலாளி மாயம்

பேரளி பகுதிகளில் நாளை மின்தடை

தில்லி சம்பவம் எதிரொலி: திருச்செந்தூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

SCROLL FOR NEXT