காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள ஜேசீஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாணவா்களிடையே அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் மற்றும் சமூக அறிவியல் சாா்ந்த படைப்பாற்றலை மேம்படுத்தும் நோக்கில் ‘ஸ்டெம் எக்ஸ்போ’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியை பள்ளியின் தலைவா் கோபால் தொடங்கிவைத்தாா்.
இதில், 6 முதல் 9 -ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் பங்கேற்று, தங்களது படைப்புகளைக் காட்சிப்படுத்தினா்.
சிறந்த படைப்புகளை காட்சிப்படுத்திய மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் தாளாளா் சி.பழனிசாமி, பொருளாளா் கொங்குராஜ், பள்ளி இயக்குநா் சாவித்ரி, பள்ளி முதல்வா் சுப்பிரமணி ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.