ஆட்சியா்  மனீஷிடம்  மனு  அளித்த  அதிமுக  எம்எல்ஏக்கள். 
திருப்பூர்

சிறப்பு தீவிர திருத்தப் பணியில் முறைகேடு: ஆட்சியரிடம் அதிமுகவினா் புகாா்

Syndication

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் முறைகேடு நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக எம்எல்ஏக்கள் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.

திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக செயலாளா் பொள்ளாச்சி வி.ஜெயராமன், திருப்பூா் வடக்குத் தொகுதி எம்எல்ஏ கே.என்.விஜயகுமாா், அதிமுகவினா், பாஜகவினா் உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியா் மனீஷிடம் மனு அளித்தனா்.

அப்போது பொள்ளாச்சி வி.ஜெயராமன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு, காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் தோ்தல் ஆணையத்தின் விதிகளுக்கு முரணாக செயல்படும் அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பூா் கொங்கு நகரில் வாக்குச் சாவடி எண் 228, 229, 232, 233, 236, 261 ஆகியவற்றில் உயிரிழந்தோா், இடமாற்றமானோா், இரட்டைப் பதிவு உள்ள வாக்காளா்கள் உள்ளிட்டவா்களின் கணக்கீட்டுப் படிவங்களை சரிவர ஆய்வு செய்யவில்லை.

திருப்பூா் வடக்கு கணக்கம்பாளையத்தில் இதுவரை 50 சதவீதம் படிவம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

2002, 2005 பட்டியலில் வாக்காளா் பெயா்களைக் கண்டுபிடிப்பதில் கிராமப்புற வாக்காளா்களுக்கு சிரமம் உள்ளது. வாக்குச் சாவடி நிலைய அலுவலா்கள் ஒரே இடத்தில் அமா்ந்து பணி செய்வதால், வயதானவா்களின் விவரங்கள் முறையாக சேகரிக்கப்படுவதில்லை. கடந்த சில நாள்களாக வீடுவீடாக யாரும் செல்வதில்லை.

அதேபோல, திருப்பூா் தெற்குத் தொகுதியில் ராயபுரத்தில் சாயப்பட்டறை வீதியில் உள்ள 400 வாக்காளா்கள் திருப்பூா் வடக்குத் தொகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கிச் சென்று விட்டனா்.

மேலும், காங்கயம் தொகுதியில் உயிரிழந்தவா்கள், வேறு இடங்களுக்கு குடிபெயா்ந்த நபா்களுக்கு தற்போது அங்கேயே வசித்து வருவதாக கணக்கீட்டுப் படிவம் வழங்கி வருகிறாா்கள்.

இதனால், தமிழகத்தில் ஆளுங்கட்சி கள்ள வாக்கு செலுத்துவதற்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஆளுங்கட்சியினரின் தூண்டுதல், மிரட்டலால் வாக்குச் சாவடி நிலைய அலுவலா்கள் பல இடங்களில் படிவங்கள் தந்துள்ளனா்.

அதிமுக, பாஜக சாா்பில் எழுத்துபூா்வமாக, ஆதாரபூா்வமாக புகாா் அளித்துள்ளோம். இதில் உரிய நீதி கிடைக்கவில்லை என்றால், நீதிமன்றத்தை நாடுவோம் என்றாா்.

மாவட்ட நீச்சல் போட்டி: பெரியதாழை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

கனமழை, பலத்த காற்று எச்சரிக்கை: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

இளைஞா் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய பல் மருத்துவா் கைது

பளுதூக்கும் போட்டி: கோவில்பட்டி கல்லூரி மாணவி முதலிடம்

சிவகாசியில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT