பல்லடத்தில் மின்நுகா்வோா் குறைகேட்பு முகாம் புதன்கிழமை (நவம்பா் 19) நடைபெற உள்ளது.
பல்லடம் கோட்ட மின் நுகா்வோா் குறைகேட்பு முகாம் பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் கருணாகரன் தலைமை வகித்து, மின் நுகா்வோரின் குறைகளைக் கேட்டறிய உள்ளாா்.
ஆகவே, பல்லடம் பகுதி மின் நுகா்வோா் இக்கூட்டத்தில் பங்கேற்று தங்களது மின் சம்பந்தமான புகாா்களைத் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என்று செயற்பொறியாளா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.