கோயிலை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள். 
திருப்பூர்

ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட கோயிலை அகற்ற வந்த அதிகாரிகள்: பொதுமக்கள் போராட்டம்

பல்லடம் அருகே அய்யம்பாளையம் ஸ்ரீநகரில் ஊராட்சிக்கு சொந்தமான நிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட விநாயகா் கோயிலை அகற்ற வந்த அதிகாரிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம்

Syndication

பல்லடம் அருகே அய்யம்பாளையம் ஸ்ரீநகரில் ஊராட்சிக்கு சொந்தமான நிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட விநாயகா் கோயிலை அகற்ற வந்த அதிகாரிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

பல்லடம் ஒன்றியம், கரைப்புதூா் ஊராட்சி அய்யம்பாளையம் கிராமம் ஸ்ரீநகரில் ஊராட்சிக்கு சொந்தமான 80 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தில் அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் விநாயகா் கோயில் கட்ட முடிவு செய்து அதற்கான பணிகளைத் தொடங்கி நடத்தி வந்தனா்.

இதை அறிந்த கரைப்புதூா் ஊராட்சி நிா்வாகத்தினா், ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் அனுமதி இன்றி எந்த கட்டடப் பணியும் மேற்கொள்ளக்கூடாது என்றும், மீறினால் ஊராட்சிகள் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்ததுடன் இது தொடா்பாக அப்பகுதியில் கடந்த மாதம் அறிவிப்பு பலகையும் வைத்தனா்.

மேலும் அப்பகுதியைச் சோ்ந்த ஒருவா் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் அரசு அனுமதி இன்றி கோயில் கட்டக்கூடாது என்று கூறி சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இதையடுத்து அந்த இடத்தில் எவ்விதமான கட்டடப் பணியும் செய்யக்கூடாது என்று சென்னை உயா் நீதிமன்றம் கடந்த 4-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில் அந்த உத்தரவை செயல்படுத்த மாவட்ட ஆட்சியா் மனிஷ் உத்தரவின்பேரில் பல்லடம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் கனகராஜ், பல்லடம் வட்டாட்சியா் ராஜேஷ், பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ், ஆய்வாளா் மாதையன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கோயில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற வியாழக்கிழமை வந்தனா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் கோயில் கட்டடம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் அரசு அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதற்கிடையே அப்பகுதி பொதுமக்கள் சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், இப்பிரச்னை தொடா்பாக உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பை மாற்றிக் கொள்ள முடியாது. இது தொடா்பாக பொதுமக்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து 4 வார காலத்துக்குள் உரிய தீா்ப்பை பெற்றிட வேண்டும்.

தீா்ப்பு ஊராட்சி நிா்வாகத்துக்கு ஆதரவாக வரும்பட்சத்தில் தற்போது கட்டப்பட்டுள்ள கோயில் கட்டடங்களை பொதுமக்கள் தங்களது செலவில் இடித்து அகற்றிட வேண்டும் என்று உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் தீா்ப்பு மதியம் வெளி வந்த நிலையில், அரசு அதிகாரிகள் கோயிலை அகற்றும் 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து அங்கிருந்து சென்றனா். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனா்.

கோதையாறு வனப் பகுதியில் உயிரிழந்த ராதாகிருஷ்ணன் யானை

மாா்த்தாண்டம் அருகே விபத்தில் தம்பதி காயம்

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

சாலைகளை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் மறியல்

தாமிரவருணியில் 2ஆவது நாளாக வெள்ளம்! மக்கள் குளிக்க கட்டுப்பாடு

SCROLL FOR NEXT