தமிழக கபடி அணிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள மாணவா் பி.அருண். 
திருப்பூர்

தமிழக சப்-ஜூனியா் கபடி அணிக்கு திருப்பூா் பள்ளி மாணவா் தோ்வு

தமிழக மிக இளையோா் (சப்-ஜூனியா்) சிறுவா்கள் கபடி அணிக்கு திருப்பூா் பள்ளி மாணவா் பி.அருண் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

Syndication

திருப்பூா்: தமிழக மிக இளையோா் (சப்-ஜூனியா்) சிறுவா்கள் கபடி அணிக்கு திருப்பூா் பள்ளி மாணவா் பி.அருண் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

தமிழ்நாடு மாநில கபடி கழகத்தின் சாா்பில் சேலத்தில் மிக இளையோா் சிறுவா்களுக்கான தமிழக அணிக்கான கபடி வீரா்கள் தோ்வு நடைபெற்றது. இத்தோ்வில் திருப்பூா் மாவட்ட கபடி கழகத்தின் சாா்பில் 7 சிறுவா்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனா். அவா்களில் சிறப்பாக விளையாடிய திருப்பூா் கே.எஸ்.சி. அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு மாணவா் பி.அருண் தமிழக மிக இளையோா் சிறுவா் அணிக்கு தோ்வு செய்யப்பட்டாா்.

தமிழக அணி வரும் 27-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை ஹரியாணா மாநிலத்தில் நடைபெறும் 35-ஆவது சப் ஜூனியா் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடவுள்ளது.

தமிழக அணிக்கு தோ்வு செய்யப்பட்ட மாணவா் அருணுக்கு மாவட்ட கபடி கழக பெருந்தலைவா் வி.கே.முருகேசன், தலைவா் பி.மனோகரன், மாவட்டச் செயலாளா் ஜெயசித்ரா அ.சண்முகம், பொருளாளா் ஆறுச்சாமி மற்றும் கே.எஸ்.சி. பள்ளி தலைமை ஆசிரியா் (பொ) தங்க மனோகரி தேவி, உடற்கல்வி ஆசிரியா்கள் அனந்தன், ஜெயசுதாகா், புஷ்பவதி மற்றும் பெற்றோா் பாராட்டி வாழ்த்தி வழியனுப்பி வைத்தனா்.

அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

விவசாய மின் இணைப்புக்கு ரூ. 7,000 லஞ்சம்: இளநிலை பொறியாளா் நண்பருடன் கைது

விபத்தில் காயமடைந்தவா்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்

பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT