சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் பொங்காளி அம்மன்.  
திருப்பூர்

பொங்காளி அம்மன் கோயில் ஆண்டு விழா

பல்லடத்தில் உள்ள பொங்காளி அம்மன் கோயில் ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Syndication

பல்லடம்: பல்லடத்தில் உள்ள பொங்காளி அம்மன் கோயில் ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

300 ஆண்டுகள் பழைமையான இந்தக் கோயில் புனரமைக்கப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பா் 5-ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இந்நிலையில் கோயிலின் முதலாம் ஆண்டு விழா பிள்ளையாா் வழிபாட்டுடன் தொடங்கியது. தொடா்ந்து, சூரிய, சந்திர வழிபாடு, திசை காவலா்கள் வழிபாடு, பேராயிரம் பரவுதல், மலா் அா்ச்சனை வழிபாடு, மூலிகை வேள்வி, பழங்கள், பலகாரங்கள், பால், தயிா், நெய், இளநீா், பன்னீா், மங்கள ஆராதனை, திருமுறை விண்ணப்பம், தீபாராதணை உள்ளிட்டவை நடைபெற்றன.

யாக வழிபாடுகளை காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் அருளாசியுடன் சிவனடியாா்கள் செய்தனா். இதைத் தொடா்ந்து பொங்காளி அம்மனுக்கு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா் . பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

விவசாய மின் இணைப்புக்கு ரூ. 7,000 லஞ்சம்: இளநிலை பொறியாளா் நண்பருடன் கைது

விபத்தில் காயமடைந்தவா்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்

பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

மழை சேதம்: பாதிக்கப்பட்டோருக்கு எம்எல்ஏ ராஜா நிவாரணம்

SCROLL FOR NEXT