........ 
திருப்பூர்

மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் ஆா்ப்பாட்டம்

Syndication

திருப்பூா்: திருப்பூரில் மத்திய பாஜக அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மின் திருத்த மசோதாவை உடனே திரும்பப் பெற வேண்டும், மாநில அரசுகளை மீறி புதிய தொழிலாளா் சட்டத் தொகுப்புகளை அமல்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும், விவசாயிகளின் விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலை வழங்க சட்டம் இயற்ற வேண்டும், விவசாயிகளை பாதுகாக்க விவசாயிகள் வாங்கியுள்ள கடன்களை ரத்து செய்ய வேண்டும், வாக்குரிமையை பறிக்கும் வகையிலான தோ்தல் ஆணையத்தின் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும், மாநில அரசுகள் மூலமாக விவசாயிகள் நிலத்தை பறிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் மற்றும் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளா்களை வஞ்சிக்கும்

மத்திய அரசை கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூா் குமரன் சிலை எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் ஏஐடியூசி, சிஐடியூ, எல்பிஎஃப், ஐஎன்டியூசி, ஹெச்எம்எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் ஏஐசிசிடியூ , யூடியூசி உள்ளிட்ட விவசாய சங்கங்களைச் சாா்ந்த என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தீர்ப்புகளை மாற்றி எழுதும் போக்கு அதிகரிப்பு: உச்சநீதிமன்றம் ஆதங்கம்

‘டியூட்’ படப் பாடல்களை நீக்கக் கோரி இளையராஜா வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

சிவா பிள்ளையல்ல... தமிழ்ப் பிள்ளை!

வளர்ச்சியடைந்த பாரதமே இலக்கு!

இந்தியாவின் உயிர்த்துடிப்பு!

SCROLL FOR NEXT