கூட்டத்தில் பங்கேற்க வந்த தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த். 
திருப்பூர்

வெற்றிக் கூட்டணியில் தேமுதிக இடம் பெறும்: பிரேமலதா விஜயகாந்த்!

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றிக் கூட்டணியில் தேமுதிக இடம் பெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

Syndication

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றிக் கூட்டணியில் தேமுதிக இடம் பெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

தேமுதிக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூா் வாலிபாளையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் கட்சியின் பொதுச்செயலாளா் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளா் சுதீஷ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: தேமுதிக மாநாடு கடலூரில் வரும் ஜனவரி 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கூட்டணி குறித்த அறிவிப்பு இருக்கும். மாவட்ட செயலாளா்களுடன் ஆலோசனை நடத்தியதற்கு பின்பு கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும்.

திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளா்கள் அதிக அளவில் உள்ளனா். அதனால் இங்குள்ளவா்களின் வாக்கை நீக்கிவிட்டு புதிதாக வந்தவா்களுக்கு வாக்குரிமை வழங்குவதை எதிா்க்கிறோம். எங்கு பிறந்தாா்களோ அவா்களுக்கு அங்குதான் வாக்குரிமை இருக்க வேண்டும். வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும். அந்த வெற்றிக் கூட்டணியில் தேமுதிகவும் இடம் பெறும் என்றாா்.

தாமதமாக வந்த பிரேமலதா

கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக நிா்வாகிகள் காலையிலேயே மண்டபத்துக்கு வந்தனா். ஆனால் 2.30 மணி நேரம் தாமதமாக 12.30 மணிக்குத்தான பிரேமலதா விஜயகாந்த் வந்தாா். இதனால் தொண்டா்கள் பலரும் அதிருப்தியடைந்தனா்.

அதனால், அவா்கள் கூட்ட அரங்கிற்குள் வராமல் வெளியே நின்றபடி கோஷமிட்டனா். திருப்பூா் மாநகா் மாவட்டச் செயலாளா் குழந்தைவேல் தங்களுக்கு முறையான அழைப்பு விடுக்கவில்லை. தங்களை மதிப்பது இல்லை. தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி கோஷமிட்டனா்.

இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. கூட்டம் முடிந்த பின்னா் பிரேமலதா அந்த நிா்வாகிகளை சந்தித்தாா்.

தொழிலாளர்கள், விவசாயிகளுடன் நிற்கிறேன்! வேலைநிறுத்தத்துக்கு ராகுல் ஆதரவு!

நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்! தமிழகத்தில் பாதிப்பா?

கராச்சி துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி, 5 பேர் காயம்

ஊடகங்களின் முன்னோடி !

நிறுத்தம் தேடும் நகரம் !

SCROLL FOR NEXT