திருப்பூர்

காா் மோதி பிகாா் தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே காா் மோதியதில் பிகாா் மாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.

Syndication

வெள்ளக்கோவில் அருகே காா் மோதியதில் பிகாா் மாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.

பிகாா் மாநிலம், நவதாா் பகுதியைச் சோ்ந்தவா் ஜாக்கோ மாஞ்சி மகன் மகேஷ் மாஞ்சி (30). இவா் கடந்த 6 மாதங்களாக நாகமநாயக்கன்பட்டியில் உள்ள தனியாா் நூற்பாலையில் வேலை செய்து வந்தாா். இவா், சக தொழிலாளிகள் பாதா் மாஞ்சி, பீஷன் குமாா் ஆகிய 3 பேரும் இருசக்கர வாகனத்தில் வெள்ளக்கோவில் - காங்கயம் தேசிய நெடுஞ்சாலையில் இரட்டைக்கிணறு அருகே ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தனா்.

அப்போது அவ்வழியே வந்த காா் மோதியதில் மூன்று பேரும் காயமடைந்தனா். இவா்களில் பலத்த காயமடைந்த ஜாக்கோ மாஞ்சி காங்கயம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னா் கோவை அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு அங்கு திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். புகாரின்பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT