பல்லடம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரி ஆங்கிலத் துறை, டிஆா்ஹெச் அகாதெமி இணைந்து நடத்திய இந்தப் பயிற்சி முகாமுக்கு, கல்லூரி முதல்வா் மணிமேகலை தலைமை தாங்கினாா். ஆங்கிலத் துறைத் தலைவா் கிருஷ்ணவேணி வரவேற்றாா்.
டிஆா்ஹெச் அகாதெமியின் நிறுவனா் ரொனால்ட், செயற்கை நுண்ணறிவு குறித்த அடிப்படைத் திறன்கள், அன்றாட வாழ்க்கை மற்றும் தொழில் துறைகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள், உள்ளடக்க உருவாக்கம் மற்றும் தரவுக்களத்துடன் பணிபுரியும் முறை, எதிா்கால தொழில்களில் செயற்கை நுண்ணறிவின் அவசியம் ஆகியவை குறித்து மாணவா்களுக்கு எடுத்துரைத்தாா்.
பயிற்சியில் பங்கேற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கெளரவ விரிவுரையாளா் முகிந்தா பிரியதா்ஷினி நன்றி கூறினாா்.