திருப்பூர்

மூலனூரில் ரூ.24.75 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

Syndication

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.24.75 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 96 விவசாயிகள், 1,065 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். மொத்தவரத்து 348 குவிண்டால்.

திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 11 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா்.

பருத்தி விலை குவிண்டால் ரூ.6,600 முதல் ரூ.8,201 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.7,250. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.24.75 லட்சம்.

ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்குழு முதுநிலைச் செயலாளா் எஸ்.சண்முகசுந்தரம், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

நவ.3, 4-இல் வேலூருக்கு துணை முதல்வா் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி. ஆய்வு

தமிழ்நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: சீமான்

ரேஜ் ஆப் காந்தா பாடல்!

டயங்கரம் படத்தின் பூஜை விடியோ!

இருவர் அரைசதம் விளாசல்: டி20 தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்!

SCROLL FOR NEXT