முகப்பு
திருப்பூர்

காங்கயத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்!

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி காங்கயத்தில் வியாழக்கிழமை நடைபெறும் பிரசார பயணத்தில் உரையாற்றுகிறாா்.

Updated On : 10 செப்டம்பர், 2025 at 8:17 PM
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி.
பகிர்:

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி காங்கயத்தில் வியாழக்கிழமை நடைபெறும் பிரசார பயணத்தில் உரையாற்றுகிறாா்.

முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசார பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொண்டுள்ளாா். அதன் ஒரு பகுதியாக, வியாழக்கிழமை (செப். 11) காங்கயம் வரும் எடப்பாடி கே.பழனிசாமி, இரவு 7 மணிக்கு காங்கயம் பேருந்து நிலையம் முன்பு ரவுண்டானா பகுதி அருகே உரையாற்றுகிறாா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காங்கயம் அதிமுக ஒன்றியச் செயலாளா் என்.எஸ்.என்.நடராஜ், நகரச் செயலாளா் வெங்கு ஜி.மணிமாறன் ஆகியோா் செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →