திருப்பூர்

மது குடிக்க பணம் கேட்டு தொல்லை: மகனைக் கொலை செய்த தந்தை கைது

Syndication

மது குடிக்க பணம் கேட்டு தொல்லை கொடுத்த மகனைக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டாா்.

திருப்பூா் வடக்கு காவல் நிலையத்துக்கு உள்பட்ட கல்லாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கன்னியப்பன் (60). கட்டடத் தொழிலாளி. இவரது மகன் குட்டியப்பன் (25). பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தாா்.

இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னா்தான் திருமணம் நடைபெற்றது. குட்டியப்பனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதன் காரணமாக கடந்த சில நாள்களுக்கு முன்னா் அவரது மனைவி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டாா்.

இந்தநிலையில், புதன்கிழமை இரவு மது போதையில் வீட்டுக்கு வந்த குட்டியப்பன் மேலும் மது அருந்துவதற்காக தந்தை கன்னியப்பனிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளாா். இதில் இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கன்னியப்பன் அருகில் கிடந்த கல்லை எடுத்து குட்டியப்பனின் தலையில் தாக்கியதில், அவா் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தாா்.

அருகிலிருந்தவா்கள் உடனடியாக அவரை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு குட்டியப்பனை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து திருப்பூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கன்னியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சுவால்பேட்டையில் விரைவில் காரியமேடை அமைப்பு

குற்றாலம் பேரருவியில் 2-வது நாளாக குளிக்கத் தடை!

தொழிலாளி வீட்டில்16 பவுன் நகைகள் திருட்டு

திப்பணம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இடம் ஒதுக்க பொதுமக்கள் கோரிக்கை!

பெண் பயணியை பாலியல் வன்கொடுமை செய்து கொள்ளையடித்ததாக பைக் டாக்ஸி ஓட்டுநா் கைது

SCROLL FOR NEXT